மருத்துவ பரிசோதனை; சோனியா வெளிநாடு பயணம்!

0
219

உடல்நலக் குறைவால் அவதிக்குள்ளாகியிருந்த காங்., தலைவர் சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு சென்றார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்று இருப்பதாகவும், ஹோலி பண்டிகை முடிந்த பிறகு, வரும் 13ம் தேதி அவர் டில்லி திரும்புவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்று கூறப்படவில்லை எனினும், அவர் அமெரிக்காவுக்கு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.