மரத்தில் மோதி, கார் விபத்து; 4 பேர் பலி!

0
352

விழுப்புரத்திலிருந்து, ஆந்திரா பதிவெண் கொண்ட கார் சென்னை நோக்கி சென்றது. காரில் 4 பெண்கள் மற்றும் டிரைவர் என 5 பேர் இருந்துள்ளனர். இதில் 2 பெண்கள் திருமணமானவர்கள்.

திண்டிவனம் அருகேயுள்ள தென்பஜார் என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒரு பெண் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.