மகராஷ்ட்டிரா உள்ளாட்சி தேர்தல்; சிவசேனா கட்சி முன்னிலை!

0
205

மகராஷ்ட்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியை சிவசேனா கட்சி கைப்பற்றுகிறது. இரண்டாவது இடத்தில் பா.ஜ.க.,வும், காங்கிரஸ் 3 வது இடத்திலும் உள்ளன.

மும்பை மாநகராட்சியில், 227 வார்டுகள் உள்ளன. 2 ஆயிரத்து 275 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்றைய ஓட்டு எண்ணிக்கையில்; சிவசேனா 90 க்கும் மேற்பட்ட வார்டுகளிலும் , பா.ஜ.,60 க்கும் மேற்பட்ட வார்டுகளிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த தேர்தலில் சிவசேனா, பா.ஜ., காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட்டன. மும்பையில் மேயர் பதவிக்கு 114 பேர் வெற்றி பெற வேண்டும். இது போல் நாக்பூர், நாசிக், புனே மாநகராட்சிகளை பா.ஜ.,வும், மும்பை, தானே பகுதியை சிவசேனாவும் பிடிக்கும் என தெரிகிறது.