பேரீச்சம் பழ கீர் செய்வது எப்படி?

0
243

தேவையான பொருட்கள் :

பேரீச்சம் பழம் – 200 கிராம்
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவைக்கு

செய்முறை :

  • பேரீட்சைப் பழங்களை ஊறவைத்து கொட்டை நீக்கி சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும்.
  • தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து, தேவையான நீர் கலந்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் பேரீச்சம் பழச்சாறு, தேங்காய் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.
  • விருப்பப்பட்டால் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.