பெப்பர் சில்லி சிக்கன் செய்வது எப்படி?

0
242

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/4கிலோ
முட்டை – 1
கான்ப்ளவர் – 1 ஸ்பூன்
தயிர் – 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் – 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 3ஸ்பூன்
பச்சமிளகாய் – 3
கரம்மசாலாத்தூள் – 1/2ஸ்பூன்
ரெட்கலர், உப்பு – தேவைக்கு
நீளமாக அறிந்த வெங்காயம் – 1
மிளகுத்தூள் – 1ஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய் – 1
எண்ணெய், மல்லி இலை – தேவையான அளவு

செய்முறை:

  • சிக்கன், முட்டை, கான்ப்ளவர், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்த்தூள், மிளகுத்தூள், பச்சைமிளகாய், கரம்மசாலாத்தூள், ரெட்கலர், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக மிக்ஸ் செய்து 1மணி நேரம் நன்றாக ஊறவிடவும்.
  • எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு ஊற வைத்த சிக்கனை பொறித்து தனியாக எடுத்துவைக்கவும்.
  • பொறித்த எண்ணெயில் வெங்காயம் போட்டு பொறிக்கவும். அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
  • பின்பு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொறித்த சிக்கன் மற்றும் மிளகு, பச்சைமிளகாய், கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதன் மேலே பொறித்த வெங்காயம் போட்டு கிளறி இறக்கவும்.
  • சுவையான பெப்பர் சில்லி சிக்கன் ரெடி.