புத்தாண்டு இராசிபலன் – 2017

0
442

மேஷம்

வருகிற 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குடும்ப பொருளாதாரம் சற்று மந்தமாக இருந்தாலும், செப்டம்பர் மாதத்தில் ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின் மூலம் குடும்பம் மட்டுமல்லாது தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும், பொருளாதார நிலையானது உயர்வடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் காரியங்களில் முழு முயற்சியுடன் பாடுபட்டால் மட்டுமே நற்பலனை பெற முடியும். கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை சிறப்பாக அமையும்.

ரிஷபம்

வருகிற 2017 ஆம் ஆண்டில் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செப்டம்பர் மாதத்திற்கு பின் பண விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியாக செயல்படக் கூடிய அமைப்பு ஏற்படும்.

மிதுனம்

வருகிற 2017 ஆம் ஆண்டில் குடும்பத்தில் தனவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருக்க கூடிய கடன் பிரச்சனைகள் யாவும் குறைந்து வாழ்வில் நல்ல முன்னேற்றமும், சுபிட்சமும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறந்து விளங்குவர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

வருகிற 2017-ம் ஆண்டில் நீங்கள் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வருடம் சற்று மந்தமான நிலையே தொடரும். குடும்பப் பொருளாதாரம் ஏற்ற இறக்கத்தோடு அமையும். உத்தியோகஸ்தர்கள் சுமாரான பலன்களையே பெறுவீர்கள்.

சிம்மம்

வருகிற 2017-ம் ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தாராள தனவரவுகளும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டி, பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் ஒருசில தடைகளுக்குப்பின் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

கன்னி

வருகிற 2017-ம் ஆண்டில் குடும்பத்தில் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். கடன்கள் அனைத்தும் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலையே காணப்படும். இந்த ஆண்டின் முடிவில் அர்த்தாஷ்டம சனி தொடங்க இருப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

துலாம்

வருகிற 2017-ம் ஆண்டின் முடிவில் ஏழரைச்சனி முழுமையாக முடிவடையும். குடும்பத்தில் பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலையே காணப்படும். சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. போட்டி பொறாமைகளால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தட்டிச் செல்லும். உத்தியோகஸ்தர்களுக்கு மன நிம்மதி குறையும். அவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும்.

விருச்சிகம்

வருகிற 2017-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல அபிவிருத்தியும் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் கிட்டும். செப்டம்பருக்கு பின்பு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல், அலைச்சல் உண்டாகும்.

தனுசு

வருகிற 2017-ம் ஆண்டில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியிருக்கும். கணவன் – மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக நிறைய போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். செப்டம்பர் மாதம் ஏற்படவுள்ள குரு மாற்றத்தினால் தொழில் வியாபார ரீதியாக நீங்கள் சந்தித்த போட்டி பொறாமைகள் மறையும். உத்தியோகஸ்தர்களும் திறமைக்கேற்ற உயர் பதவிகளை அடைவார்கள். வாழ்வில் சுபிட்சமான நிலையினை அடைவீர்கள்.

மகரம்

வருகிற 2017-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை குருபகவான் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உடல் ஆரோக்கியமானது அற்புதமாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிட்டும். ஆகஸ்டு மாதம் முதல் ராகு, கேது சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும்.

கும்பம்

வருகிற 2017-ம் ஆண்டில் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடும், பொருளாதார நிலையில் இடையூறுகளும் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிர்பாராத முன்னேற்றங்களை அடைய முடியும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறுவிரயங்கள், நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செப்டம்பர் மாதத்திற்குப் பின் ஒரளவுக்கு மேன்மைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகளைப் பெற்று விட முடியும்.

மீனம்

வருகிற 2017-ம் ஆண்டில் கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் தடையின்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான பதவிகளும், ஊதிய உயர்வுகளும், எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்களும் கிடைக்கும்.

 – ஜோதிடர் முருகுபாலமுருகன்