பார்லி வெண் பொங்கல் செய்வது எப்படி?

0
226

தேவையான பொருட்கள் :

உடைத்த பார்லி – 1 கப்,
பாசிப் பருப்பு – கால் கப்,
ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை – சிறிது,
நெய் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை.

செய்முறை :

  • இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பார்லியையும், பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் லேசாக தனித்தனியே வறுத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் பார்லி, பாசிப்பருப்புக் கலவையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் போட்டு வேக வைக்கவும்.
  • வெந்ததும் சூடாகப் பரிமாறவும்.
  • சத்தான பார்லி வெண் பொங்கல் ரெடி.