பாகிஸ்தானில் மீண்டும் இந்திய சினிமா!

0
253

பாகிஸ்தானில் தியேட்டர்களில் இந்தியாவில் தயாராகும் இந்தி படங்கள் அதிக அளவில் திரையிடப்படும்.

இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து சர்ஜிகல் ஆப்ரேசன் என்ற தாக்குதலை நடத்தியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்திய படங்கள் அங்கு வெளியாகாததால் சினிமா தொழில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. எனவே, இந்த தொழில் சம்பந்தப்பட்டவர்கள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் முறையிட்டனர். எனவே, இதுபற்றி ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெறலாம் என சிபாரிசு செய்தது.

இதனால் பிரதமர் அலுவலகம் இந்த தடையை விலக்கி கொண்டுள்ளது. எனவே, இந்திய படங்களை திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதல் படமாக ரேயிஸ் மற்றும் காபில் படங்களை அங்கு திரையிட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.