பரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி?

0
1369

தேவையான பொருள்கள்

சிக்கன் – அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

எண்ணெய்- 1 ஸ்பூன்
பட்டை – 1
மிளகு – 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 4
தேங்காய் – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

  • கடாயில் எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கி ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  • குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி அதனுடன் சிக்கன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் விட்டு வேக விடவும்.
  • குக்கிரில் ஆவி அடங்கிய பின் அரைத்த மசாலா கலவையை அதில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி விடவும்.
  • சுவையான பரோட்டா சிக்கன் சால்னா ரெடி