பப்பாளிப் பழத்தின் மருத்துவ குணங்கள்…

0
319

பப்பாளிப் பழம் மலிவாகக் கிடைத்தாலும், மருத்துவக் குணங்களுக்குக் குறைவில்லாதது. பப்பாளியில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஏ, சி, இ போன்ற உடம்புக்கு ஆரோக்கியமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.

பப்பாளிப் பழம் மட்டுமின்றி, பப்பாளிக் காயும் சாப்பிடுவதற்கு உகந்தது. பப்பாளிக் காயை தினமும் கூட்டாக சமைத்துச் சாப்பிட்டு வந்தால், குண்டான உடல் படிப்படியாகக் குறையும்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை கூழாகப் பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். நன்கு ஊறியதும் வெந்நீரால் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மாறி, முகம் அழகுபெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகள் அழிந்து, வயிற்றுப்புண்கள் குணமாகும்.

பப்பாளிக் காயை குழம்பு வைத்து, பிரசவித்த பெண்கள் அதை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால், பால் சுரப்பு அதிகமாகும்.

குழந்தைகளுக்கு தினமும் பப்பாளிப் பழத்தைக் கொடுத்தால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பல், எலும்பு போன்றவை வலுவாகும்.

தினமும் பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

பப்பாளிப் பழத்தை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப்புண்கள் மேல் தடவி வந்தால், புண்கள் விரைவில் ஆறிவிடும்.

பப்பாளிப் பழத்தை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், கண் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளையும், புற்று நோய் அபாயத்தையும் தவிர்க்கலாம் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து.