நெடுவாசல் போராட்டம்; நெடுவாசல் மக்கள் பக்கம் தி.மு.க., இருக்கும் – ஸ்டாலின்

0
242

புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிராக கடந்த 15 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் வந்தனர்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஸ்டாலின் பேசியதாவது:இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். மக்கள் போராட்டமாக ஹைட்ரோ கார்பன் விவகாரம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என இங்கு வந்துள்ளேன்.

நெடுவாசல் மக்கள் பக்கம் தி.மு.க., இருக்கும். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருவதை பெருமைப்படுகிறேன். மக்கள் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு வாபஸ் பெறாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.