நாளை கனமழைக்கு வாய்ப்பு!

0
223

டில்லியின் பல பகுதிகளில் நாளை (மார்ச் 10) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 64 மி.மீ., வரை மழை எதிர்பார்க்கலாம் என்று டில்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் பகல் மற்றும் மாலை நேரங்களில் 15 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 முதல் 11 டிகிரி செல்சியசாக இருக்கும். அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச வெப்ப நிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கே இருக்கும். காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பரவலாக மழை அல்லது பனிப்பொழிவு இருக்கும் எனவும் டில்லி வானிலை மையம் தெரிவித்துள்ளது.