நாட்டுக்கோழி கிரேவி செய்வது எப்படி?

0
244

தேவையான பொருள்கள்:-

நாட்டு கோழி – 1 கிலோ
சாம்பார் வெங்காயம் – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 4
தக்காளி – 4
மிளகாய் – 10
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 50 கிராம்
மிளகாய் தூள் – 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 3 ஸ்பூன்
சீரகத் தூள் – 2 ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பட்டை, ஏலம், கிராம்பு – 5
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
தேங்காய் – 1 மூடி
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:-

  • நாட்டு கோழியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள், உப்பு போட்டு கிளறவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு சூடான பிறகு பட்டை, கிராம்பு, ஏலம், சோம்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். அத்துடன் சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • வதங்கிய பிறகு இஞ்சி, பூண்டு, தக்காளியை போட்டு கிளறவும்.
  • மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, சீரகத் தூள் போன்றவற்றையும் அதனுடன் சேர்க்கவும்.
  • மிக்ஸியில் அரைத்து அத்துடன் தேங்காயை சேர்க்கவும்.
  • அதன் பிறகு நறுக்கிய கறித்துண்டுகளை அதில் போட்டு தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடுவும்.
  • தண்ணீர் வற்றிய பிறகு இறக்கவும்.
  • சுவையான நாட்டுக்கோழி கிரேவி ரெடி.