தீபாவளிக்கு சிறுவர்களை கவரும் வகையில் கார்ட்டூன் பட்டாசுகள்!

0
227

இந்த ஆண்டு தீபாவளிக்கு சிறுவர்களை கவரும் வகையில் கார்ட்டூன் பெயர்களில் 32 புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி என்றால் நம்முடைய நினைவுக்கு வருவது பட்டாசுதான். சிறியவர் முதல் பெரியவர் வரை தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுவதில், பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தாண்டு வருகிற 29 அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விதமான புதிய ரக பேன்சி பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல வண்ணங்களை உமிழும் வாண வேடிக்கைகளும், வித்தியாசமாக ஒலிகளை எழுப்பும் வெடிகளும், வண்ண மயில் தோகை விரிப்பது போல், இந்தாண்டு சிறுவர்களை மகிழ்ச்சி அடையும் வைக்கும் வகையில் 32 புதிய பட்டாசு ரகங்கள் சிவகாசியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளன.