செல்லப் பிள்ளையாக மாறும் ‘கிரோபோ மினி’ ரோபோ

0
221

டொயோட்டா நிறுவனம், ‘கிரோபோ மினி’ என்ற நான்கு அங்குல உயரமுள்ள ரோபோவை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தடுமாற்றத்துடன் நடப்பது முதல் கொஞ்சும் மழலையில் பேசுவது வரை, சிறு குழந்தையை நினைவூட்டும் விதத்தில், கிரோபோ மினி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் குழந்தையில்லாத தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை இலக்கு வைத்து இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கேமரா, மைக், ப்ளூ டூத் வசதிகளுடன் வரும் இந்த ரோபோவை ஸ்மார்ட் போன் மூலம் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். ஜப்பானில் ஒருவருக்கு, ‘கம்பெனி’ கொடுக்கும் ரோபோக்கள் இப்போது அதிகம் வர ஆரம்பித்துள்ளன. கிரோபோ என்ற இந்த குட்டி ரோபோ, வந்தவுடனேயே பலரது செல்லப் பிள்ளையாக மாற ஆரம்பித்திருக்கிறது.