சென்னையில் 6 நாட்கள் நடைபெறும் மாநில ஆக்கிப் போட்டி!

0
298

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மன மகிழ்மன்றம் சார்பில் மாநில அளவிலான அழைப்பு ஆக்கிப்போட்டி சென்னையில் வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 6 நாட்கள் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

இதில் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமான வரி, மத்திய கலால் வரி, தமிழ்நாடு போலீஸ், சென்னை நகர போலீஸ், இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்), ஆக்கி அகாடமி, ஏ.ஜி.எஸ். அலுவலகம், லயோலா கல்லூரி ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆட்டத்தில் சிறந்த வீரர் விருதும், தொடர் நாயகன் விருதும் வழங்கப்படும்.