சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நாளை தொடக்கம்

0
231

சென்னையில், சர்வதேச திரைப்பட விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. சர்வதேச தமிழ் பிலிம் அகடமி மற்றும் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் இணைந்து இந்த பட விழாவை நடத்துகிறார்கள். தொடக்க விழா, நாளை காலை 10 மணிக்கு சென்னை சத்யம் தியேட்டரில் நடக்கிறது.

தொடக்க விழாவில், ஜெர்மனியில் தயாரான ‘ஆர்ட் கேர்ள்ஸ்’ என்ற படம் திரையிடப்படுகிறது. அந்த படத்தின் டைரக்டர் ராபர்ட் பிரம்ப்கெம்ப் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழா சத்யம் தியேட்டரில் நடைபெற்று முடிந்ததும், ரஷிய கலாசார மையத்தில் மற்ற படங்கள் திரையிடப்பட உள்ளன.