சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்!

0
318

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சில இடங்களில் இடியுடன் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த இரு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் சில இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.