சில்லி சிக்கன் செய்வது எப்படி?

0
651

தேவையானவை:

சிக்கன் – அரை கிலோ
பூண்டு – 5
பச்சைமிளகாய் – 5
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு

செய்முறை:

  • சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு பூண்டு, பச்சை மிளகாய் இவை இரண்டையும் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த விழுது இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கிளறி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் கலவையை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து கிளரி நன்கு வேக வைக்கவும்.
  • சிக்கன் வெந்து நன்கு சுண்டி வந்தவுடன் இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.
  • சுவையான சில்லி சிக்கன் ரெடி