சிறந்த விஷுவல் எஃபெக்ட்; தி ஜங்கிள் புக் படத்துக்கு ஆஸ்கர் விருது!

0
244

89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில் மூன்லைட், லா லா லேண்டு, ஹேக்சா ட்ஜ், லயன் போன்ற படங்கள் பல பிரிவுகளில் பரிந்துரைப் பட்டியலில் இருக்கின்றன. ஆஸ்கர் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது. மேலும், சிறந்த ஆவணப் படம் விருதை ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா படம் வென்றது.

அதேபோல், சிறந்த அனிமேஷன் விருது ஜூடோபியா படத்துக்கு கிடைத்துள்ளது. தி லையன் கிங் படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரம் சுன்னி பவர் ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளார்.

மேலும் சில விருதுகள் விவரம்:-

சிறந்த துணை நடிகர் – மஹேசர்லா அலி

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – கொலின் அட்வுட்

சிறந்த ஆவண குறும்படன் – ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா

சிறந்த ஒப்பனை, சிகையலங்கார விருது – சூசைடு ஸ்குவாடு

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் விருது – ஹக்ஸா ரிட்ஜ்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் – அரைவல்

கவுரவ ஆஸ்கர் விருது – ஜாக்கிசான்

சிறந்த துணை நடிகை – வியோலா டேவிஸ் தை(பென்சஸ் படம்)

சிறந்த வெளிநாட்டு மொழி படம் – தி சேல்ஸ்மேன்(ஈரான்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – லா லா லேண்ட்