சிக்கன் சூப் செய்வது எப்படி?

0
847

தேவையானவை:

சிக்கன் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 56 பல்
பட்டை, லவங்கம் – சிறிதளவு
மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 4 விசில் வரும் வரை வேக விடவும்.
  • நன்கு வெந்தவுடன் இறக்கி லெமன் பிழிந்து பரிமாறவும்.
  • சுவையான சிக்கன் சூப் ரெடி.