சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஆப்பிள் நிறுவனம்!

0
240

ஆப்பிள் நிறுவனம் ஐபோனின் தயாரிப்பு பணிகளை 10 சதவிகிதம் வரை குறைக்க திட்டமிட்டிருப்பதாகவும், இந்த முடிவு 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் விடுமுறை கால விற்பனைகள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சென்ற ஆண்டு டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வரையிலான காலகட்டத்தில், ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட் மொத்தமாக 44 சதவிகித மொபைல் ஆக்டிவேஷன்களை பெற்றுள்ளது. இது சாம்சங் நிறுவனத்தை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆப்பிள் சாதனங்களின் மொத்த ஆக்டிவேஷன்களின் எண்ணிக்கை 49.1 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது, சாம்சங் நிறுவனத்தின் ஆக்டிவேஷன் எண்ணிக்கை 19.8 சதவிகிதம் ஆக இருந்தது.