சத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி?

0
1277

தேவையான பொருட்கள் :

தோலில்லாத வெள்ளை உளுந்து – 100 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
பால் – 1/2 லிட்டர்
பனைவெல்லம் – தேவைக்கேற்ப
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

  • பாலை நன்றாகக் காய்ச்சி ஆறவிடவும்.
  • உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் நீரில் கழுவி, குக்கரில் வைத்து நன்றாகக் குழைய வேகவைத்துக்கொள்ளவும்.
  • விசில் போனவுடன் குக்கரை திறந்து வெந்த பருப்பையும் அரிசியையும் கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, பாலை அதில் சேர்க்கவும்.
  • தேவைக்கேற்ப பனைவெல்லம் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக் கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  • விருப்பப்பட்டால் ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம். சத்தான உளுத்தம் கஞ்சி தயார்.