சட்டசபை தேர்தல்; நாளை ஓட்டு எண்ணிக்கை!

0
231

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 2 மாதங்களாக பல கட்டங்களாக நடைபெற்றது.

வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்ததைத் தொடர்ந்து 5 மாநிலங்களிலும் நாளை (சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. அடுத்த சில நிமிடங்களில் முன்னணி நிலவரம் வெளியாகி விடும். காலை 11 மணிக்கு 3 மணி நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னணி விவரம் தெரிந்து விடும். பகல் 12 மணிக்குள் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது தெரிந்துவிடும்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா 3 மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் காங்கிரசுக்கே வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடேயும் (30 முதல் 36 இடங்கள்), பா.ஜனதாவுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்தியா டி.வி.யும் (25 முதல் 31 இடங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் அகாலி தளம் – பா.ஜனதா கூட்டணிக்கு பெரும் பான்மை கிடைக்காது என்றும் ஆம் ஆத்மி கட்சி பலமான போட்டியாக இருந்து வெற்றி வாய்ப்புகளை தட்டி பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.