கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி செய்வது எப்படி?

0
236

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 கப்,
தேங்காய்ப்பால் – அரை கப்,
பச்சைமிளகாய் – 2,
கேரட் – 1,
பீன்ஸ் – 10,
பட்டாணி – சிறிதளவு,
தண்ணீர், உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை :

  • காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும்.
  • அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
  • வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.
  • சத்தான கோதுமை ரவை வெஜிடபிள் கஞ்சி ரெடி.