கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி?

0
228

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 2 கப்
கடலை மாவு – ஒரு கப்
பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – அரை மேசைக்கரண்டி
டால்டா – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – ஒரு கப்

செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு மற்றும் கடலை மாவு போட்டு சல்லடையால் சலித்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கரண்டியில் அல்லது வாணலியில் டால்டாவை போட்டு உருக்கி, சலித்து வைத்திருக்கும் மாவில் ஊற்றவும்.
  • அதன் பின்னர் மாவில் பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் உப்பு போடவும். எல்லாவற்றையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • கெட்டியாக பிசைந்த பிறகு, முறுக்கு உரலில் மாவு கொள்ளும் அளவிற்கு நிரப்பவும்.
    பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உரலில் வைத்திருக்கும் மாவை எண்ணெய்யில் வட்டமாக எண்ணெய் முழுவதும் பிழியவும்.
  • ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். பிறகு மீண்டும் ஒரு நிமிடம் கழித்து எண்ணெய் அடங்கியதும் முறுக்கை எடுத்து விடவும்.
  • சத்தும் சுவையும் அடங்கிய கேழ்வரகு முறுக்கு தயார்.

– திருமதி. மங்கம்மா