குழந்தைகளை கவரும் மரபொம்மைகள்!

0
254

மரபொம்மைகள் பழங்காலம் தொட்டே பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. பாரம்பரிய மரவிளையாட்டு பொம்மைகள் என்பதில் தலையாட்டி பொம்மை, மரப்பாச்சி பொம்மை, விலங்கு பொம்மைகள், உருளைதட்டுகள், கிலுகிலுப்பை, வண்டிகள், பல்லாங்குழி போன்றவை முக்கியமானவை. தற்போது சில மரப்பொம்மைகளான யோயேர்; பர்பி பால்ஸ் போன்றவை வருகின்றன.

மரபொம்மைகளில் குழந்தைகள் தவழும் முதல் கையில் உள்ள மரப்பாச்சி பொம்மை தான் அதிக சிறப்பு உடையது. கருங்காலி மரத்தினால் அழகிய பெண் உருவத்தில் செய்யப்படும் இந்த மரப்பாச்சி பொம்மைகள் குழந்தையின் கையில் பிடித்து கொள்ளும்விதமாய் வளைவுடன் இருக்கும் இந்த மரப்பாச்சி பொம்மையை குழந்தை வாயில் வைத்து சுவைத்தாலும் ஏதும் தவறில்லை. கருங்காலி மரத்தின் சாறு குழந்தையின் வயிற்றுக்கு இதமான மருந்தே. இன்றை நாளிலும் அழகிய, இராசயன பூச்சி இல்லாத மரப்பாச்சி பொம்மைகள் கிடைக்கவே செய்கின்றன. ஆனால் யாரும் குழந்தைக்கு வாங்கி தான் தரமறுக்கின்றனர்.

இராசயன கலப்பில்லாத இயற்கை வண்ண மரபொம்மைகள் :

மரத்தில் செய்யப்படும் பொம்மைகளின் மீது பூசப்படும் வண்ணங்கள் தான் அதன் மீதான ஈர்ப்பை தருகின்றன. வண்ணங்கள் இராசயன கலப்பில் இருந்தால் குழந்தைகள் எடுத்து சுவைக்கும் போது, கையில் விளையாடும் போதும் ஏராளமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே தற்போது மரபொம்மைகள் இயற்கையான வண்ண கொண்டவாறு உருவாக்கப்படுகிறது. இதில் மஞ்சள் வண்ணத்திற்கு மஞ்சள், சிகப்பு நிறத்திற்கு குங்குமம், மாதுளை தோல், நீலம் மற்றும் பச்சை நிறத்திற்கு இண்டிகோ போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

ஐவரி மரத்தின் மூலம் பெரும்பாலும் செய்யப்படும் மரபொம்மைகள் சில சமயம் சந்தன மற்றும் தேக்கு மரத்தில் செய்யப்படுகிறது.

வண்ணமயமான ரயில் வண்டி, மாட்டு வண்டி, பம்பரம், தலையாட்டு பொம்மைகள், விசில் போன்ற மரபொம்மைகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தருவதுடன் உடல் நலத்திற்கு தீங்கின்றியும் கிடைக்கிறது.