காடை பெப்பர் மசாலா செய்வது எப்படி?

0
457

தேவையான பொருட்கள்:

காடை – 4
பெரிய வெங்காயம் – 2
தயிர் – அரை கப்
கொத்தமல்லி – 2 கொத்து
புதினா – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – ‍ 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் ‍ – 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – ‍ 1 டீஸ்பூன்
உப்பு – ‍ தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – ‍‍ 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – ‍ 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:

  • காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
  • காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.
  • இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிரட்டவும்.
  • 3 நிமிடம் கழித்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு நன்கு கிளரவும்.
  • அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.
  • பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை 15 நிமிடம் வேக விடவும்.
  • இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும். 15 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
  • மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான காடை வறுவல் ரெடி.