ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை வரலாறு படமாகிறது!

0
246

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். இதற்காக அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து, அவரது அனுபவங்களை சேகரித்து பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் மாரியப்பன் தங்கவேலு கதாபாத்திரத்தில் நடிகர் தேர்வு நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்துக்கு ‘மாரியப்பன்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த படத்துக்கான முதல் தோற்றம் (போஸ்டர்) புத்தாண்டையொட்டி நேற்று வெளியிடப்பட்டது. இந்தி நடிகர் ஷாருக்கான் இதனை வெளியிட்டார்.