உலகின் தலைசிறந்த நகரம்!

0
359

மெர்சர் என்ற நிறுவனம் மொத்தம் 231 நகரங்களை வைத்து உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரமும், 3-வது இடத்தை நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரமும், 4-வது மற்றும் 5-வது இடங்களை ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கோவர் நகரங்களும் பிடித்துள்ளன.

ஆசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிங்கப்பூர் இந்தப் பட்டியலில் 25-வது இடத்தையும், அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரம் இதில் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கும் பாக்தாத் உலகின் மோசமான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.