உணவு விடுதியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி!

0
219

சுவிட்சர்லாந்தின் பேசல் என்ற நகரில் ஒரு உணவு விடுதியில் நேற்று இரவு 8 மணியளவில் அங்கு அதிகம் பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த சில மர்ம நபர்கள், திடீரெனயாரும் எதிர்பார்க்காத போது தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ஒருவருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் அருகேயுள்ள ரெயில் நிலையம் நோக்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.