இரத்தினங்களின் மருத்துவ குணங்கள்!

0
380

இரத்தினகளுக்கு நோய்களை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. சரியான நவரத்தின கற்களை அணியும் போது வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் அமைவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகின்றது. மேலும் உடலின் வசீகரத்தையும் இரத்தினங்கள் அதிகரிக்கின்றன. பொரும்பாலும் நோய்களின் பிரச்சனைகளுக்கு மன பிரச்சனைகளே அதிக காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மனத்தின் இறுக்கம், படபடப்பு, பயம், தன்னம்பிக்கையின்மை, கோழைத்தனம் போன்ற மனக்கோளாறுகளே அதிக நோய்களுக்கு அடித்தளமாக அமைகின்றது. இரத்தினங்கள் அணிவதால், மனதிற்கு உற்சாகமும், தன்னம்பிக்கையும் கிடைக்கின்றன. இரத்தினங்களை அணிந்து கொண்டால் நோய்கள் வராமல் தவிர்க்கலாம், உடலில் இருக்கும் நோய்களை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம். இரத்தினங்கள் அணிவதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. நோய்கள் விரைவில் குணமாகவும். ஆரோக்கியத்தை தொடர்ந்து பாதுகாக்கவும் இரத்தினங்கள் மிகவும் உதவி புரிகின்றன.

இரத்தினங்கள் நோய்களை குணமாக்கும் விதம்

இரத்தினங்களிலும், நவரத்தினங்களிலும் ஏராளமான வண்ணக் கதிர்கள் நிறைந்திருக்கின்றன. அது மட்டுமில்லாமல் இந்த இரத்தினங்கள் தங்களிடம் இருக்கும் உயிராற்றல் கதிர்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன.

இரத்தினங்கள் கோள்களின் கதிர்களை ஆகர்ஷிப்பதும், வெளியிடுவதும் ஒரு தொடர் நிகழ்ச்சியாக இருக்கின்றது. ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு வகையான நிறமுள்ள கதிர்களை வெளியிடுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட இரத்தினமும் தன்னுடைய சார்பு கோள்களின் கதிர்களை உள் வாங்கி அதை மனிதனுக்கு தேவையான அளவு வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றது.

இதனால் மனித உடலில் ஏற்படுகின்ற வண்ண குறைபாடுகளை சரி செய்து நோய்களை சரி செய்து நோய்களை குணப்படுத்துகின்றன.

கோள்கள்  –  நிறம்  –  இரத்தினம்

சூரியன் – சிவப்பு – மாணிக்கம்
சந்திரன் – ஆரஞ்சு – முத்து
செவ்வாய் – மஞ்சள் – பவளம்
புதன் – பச்சை – மரகதம்
குரு – நீலம் – புஷ்பராகம்
சுக்கிரன் – இண்டிகோ – வைரம்
சனி – வயலட் – நீலம்
இராகு – அலட்ரா வயலட் – கோமேதகம்
கேது – இன்பரா ரெட் – வைடூர்யம்

ஆயர்வேத வைத்திய முறையில் நவரத்தினங்களின் உபயோக முறைகளையும் நோய்களை தீர்க்கும் முறையும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.