ஆளில்லா விமானம் மூலம் டோர் டெலிவரி: அமேசானின் புதிய சேவை

0
248

பிரபல இணைய வர்த்தக சேவை நிறுவனமான அமேசான், ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் டோர் டெலிவரி சேவையை தொடங்கியுள்ளது.

இணைய வர்த்தக சேவையில் முதன்முதலாக அமேசான் நிறுவனம் இத்தகைய புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்து சுமார் 13 நிமிடங்களுக்குள் உரியவரிடம் கொண்டு சேர்க்கப்படும் எனவும் பாப்கார்ன் போன்ற மிகவும் எடை குறைவான பொருட்கள் மட்டுமே டிரோன் விமானம் டெலிவரி செய்யப்படும் எனவும் அமேசான் அறிவித்துள்ளது.

ட்ரோன் மூலம் முதன்முதலில் டிசம்பர் 7 ஆம் தேதி அதன் முதல் விற்பனையை தொடங்கியது. இந்த டிரோன் 400 அடி உயரத்தில் பறந்து செல்லும் திறன் உடையது. வாடிக்கையாளர்களின் டெலிவரி குறித்த ப்ரோக்ராம்மிங் ட்ரோன் விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் படி பறந்து சென்று பொருட்களை உரியவர்களிடம் கொண்டு சேர்கிறது.

ட்ரோன் மூலம் விற்பனை செய்ய சிவில் ஏவியேசன் அதாரிட்டியிடமிருந்து தகுந்த ஆவணங்களை அமேசான் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.