ஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்!

0
335

ஆடைகள் தொடங்கி அலங்காரப்பொருட்கள் வரை, மொபைல் மூலம் நமக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து இருந்த இடத்திலிருந்தே வாங்கிக்கொள்ள மக்கள் பழகி விட்டனர்.

இந்நிலையில் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் இந்தியாவில் அதிகம் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் முன்னணி வகிக்கும் மெட்ரோ நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப்பட்டியலில் முதலிடம் தலைநகர் டெல்லிக்கு. அடுத்தடுத்த இடங்களை பெங்களூர், மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன. சிறு நகரங்கள் பட்டியலில் வேலூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களை திருப்பதி, பெல்லாரி, ஜோர்காட், கோட்டயம் ஆகிய நகரங்கள் பிடித்துள்ளன.

மொபைல்கள், பெண்களுக்கான துணிகள், செருப்புகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை இந்தியா முழுவதும் அதிகம் விற்பனையானதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இதுதவிர ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் ஆண்களே முன்னிலை வகிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.